தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
71

தமிழக பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதோடு நாளை தமிழகம், மற்றும் புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் 2 நாட்களுக்கு ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு லட்சத்தீவுபகுதி, கர்நாடகா, கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.