ஆப்பிரிக்காவிலிருந்து ஆபத்தான அடுத்த வைரஸ் பரவ வாய்ப்பு!

0
85

கொரோனா வைரஸ் என்ற மிகப் பெரிய ஆபத்தான கொடிய நோய், 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி இன்றுவரை அதன் தாக்கத்தை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வூகான் பகுதியிலிருந்து பரவத்தொடங்கியது.

அங்கு உள்ள ஒரு வனவிலங்குகளின் சந்தையிலிருந்து பரவியதாக ஒருவித தகவல். சந்தையில் விற்கப்பட்ட இனம்தெரியாத பறவைகள், விலங்குகள் உயிருடன் கொல்லப்பட்டும், முழுமையாகச் சமைக்கப்படாமலும், அந்தப் பகுதி மக்கள் சாப்பிட்டதால் இந்த வகை வைரஸ் பரவியது என்று அப்பகுதி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இப்பொழுது ஆப்பிரிக்காவில், இதேபோன்று வனப்பகுதகளில் இருந்து பிடித்து வரப்படும் விலங்குகள், பறவைகள் விற்கப்படும் சந்தை ஒன்று இருக்கிறது. அதில், இந்த பாதிப்பை தொடர்ந்து, இன்னும் அறியாமையில் இருக்கும் மக்கள் பலர், இந்த விலங்குகளை உயிருடன் கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு அரைகுறையாக சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இதன்மூலம் புதுவித வைரஸ் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த சந்தை நைஜீரியாவில் உள்ள ஒலுவு என்ற இடத்தில் நடந்து வருகிறதாம். உருமாறி வரும் கொரோனா வைரஸ்களிலிருந்து பாதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் மக்கள் இவ்வாறு அலட்சியமாக வன விலங்குகளை வதைத்து உண்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K