இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

0
61

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (பிப்ரவரி 25) நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளைய தினம் (பிப்ரவரி 26) திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுகோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (பிப்ரவரி 27) அன்று கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K