தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
76

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு காற்றலையின் காரணமாக ஒருசில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

வடகிழக்கில் இருந்து காற்று வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு தட்ப வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

மேலும் வடகிழக்கு காற்றலையின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யகூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று 3 நாட்களுக்கு வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Parthipan K