தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு! மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!

0
60

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றின் காரணமாக, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 14ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில், காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில், இன்றும், நாளையும், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த நிலையில், இன்றும், நாளையும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில், எதிர்வரும் 13 மற்றும் 14 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சமயத்தில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில், தெற்கு மகாராஷ்டிரம், கோவா ,கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள்கிழமை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்புள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட இந்த தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.