அதிர்ச்சி இந்த 10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! தயவுசெய்து இங்க மட்டும் போகவே போகாதீங்க!

0
61

தமிழகத்தில் கோவை நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருப்பதாவது, தமிழக பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 1 மற்றும் 2 மற்றும் 3 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேபோல இன்று கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு, உள்ளிட்ட பகுதிகளிலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் மேகத்தில் காற்று வீசக்கூடும்.

ஆகவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.