புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!

0
77

புதிதாக ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அக்டோபர் 29- ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதினால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையானது இந்த வருடம் 28 -ஆம்தேதி தாமதமாக தொடங்க இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள மதுரை, சிவகங்கை ,கடலூர் ,விருதுநகர், நாமக்கல், திருச்சி, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு மையம் கூறுகையில், வரும் அக்டோபர் 27 மற்றும் 28-ஆம் தேதி சிவகங்கை, மதுரை ,விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காற்றுடன் கூடிய கனமழை வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர் .மேலும், ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

author avatar
Parthipan K