உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

0
66

உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

பேருந்தில் வழக்கமாக தோனிக்காக ஒதுக்கப்படும் இருக்கையில் தற்போதும் யாரும் உட்கார்வதில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம். அதன் பிறகு அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரின் இடம் என்ன ஆனது? உலகக்கோப்பை 20-20 தொடரில் விளையாடுவாரா என்பது எல்லாம் சிதம்பர ரகசியமாக உள்ளது. சமீபத்தில் பிசிசிஐ அவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் தோனி குறித்த தனது நினைவினைப் பகிர்ந்துகொண்டுள்ளார் யஷ்வேந்திர சஹால்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனது மொபைல் போனில் சக வீரர்களை நேர்காணல் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் இதுபோன்ற வீடியோக்களை அவர் எடுத்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நியுசிலாந்தில் இருக்கும் இந்திய அணி மூன்றாவது டி 20 போட்டிக்காக ஹாமில்டன் மைதானத்துக்கு சென்றுள்ளது. அந்த பேருந்து பயணத்தின் போது சஹால் தோனி குறித்த தனது நினைவினைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பயனத்தில் அவர், ஒவ்வொரு பூம்ரா, பண்ட் ஆகிய ஒவ்வொரு வீரரிடமும் கேள்விகளை எழுப்பினார். அப்போது பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற அவர் காலியாக இருந்த அந்த சீட்டைப் பார்த்து உணர்ச்சிகரமாக ‘கடைசி சீட்டில் இருக்கும் ஜன்னலோர இருக்கை எப்போதும் லெஜண்ட்(தோனி) ஒருவருக்காக ஒதுக்கப்படும். அவருக்காக சீட்டில் இப்போதும் யாரும் உட்காருவதில்லை. அணியில் உள்ள அனைவரும் அவரை மிஸ் செய்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

author avatar
Parthipan K