30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்!

0
104
chad president killed
chad president killed

30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்!

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் (Chad) நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 1990ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக அதிபர் இட்ரிஸ் டிபை ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு வயது 68. அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள புரட்சிப் படையினர், ராணுவத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ராணுவத்தினரும், புரட்சிப் படையினரும் உயிரிழந்தனர். தினந்தோறும் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் அந்த நாட்டில் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

அதே நேரத்தில், கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிபர் இட்ரிஸ் டிபை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் மீண்டும் அதிபராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வடக்கு சாடில் புரட்சிப்படையினர் நடத்திய தக்குதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூற அதிபர் இட்ரில் டிபை சென்றார்.

அங்கு மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் அதிபர் இட்ரிஸ் டிபை கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து, சாட் நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூட ராணுவம் ஆணையிட்டதுடன் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்த்து.

அதிபர் இட்ரிஸ் டிபை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கலைத்த ராணுவம், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுவரை இடைக்கால அதிபராக இட்ரிஸ் டிபையின் 37 வயது மகன் மகமத் இட்ரிஸ் டிபை இட்னோ இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகமத் இட்ரிஸ் டிபை இட்னோ அந்நாட்டு ராணுவத்தின் முக்கிய பதவியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.