ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு !!

0
69

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளது.

இன்று மாநிலவை கூட்டப்பட்டு ,எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் ,மத்திய அரசு மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அரசு ,”மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி தொகைக்கு ,தற்பொழுது போதுமான நிதி இல்லாததால் வழங்க இயலாது” என தெரிவித்துள்ளது.

மேலும், ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க இயலாது எனவும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசிடமிருந்து ரூபாய். 11,700 கோடி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ,கடந்த மாதம் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்கும் வரை மாநில அரசுகள் கடன் வாங்கி கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K