உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை ரஷ்யா வழியாக மீட்க்க அதிரடி திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

0
87

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த 22 நாட்களை கடந்தும் இந்த போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், போரை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தாலும் ரஷ்யா அதனை பெரிய அளவில் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

உக்ரைனிலிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவிற்கு மீட்டுவரப்பட்டிருக்கிறார்கள் .

இந்த நிலையில், உக்ரைனில் வான் எல்லை மூடப் பட்டிருப்பதால் அண்டை நாடான போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவேக்கியா, உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய மக்கள் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டார்கள்

இதுவரையில் 22,500 இந்தியர்கள் பயணிகள் விமானம், விமானப்படை விமானம், மூலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மீதமிருக்கும் இந்தியர்களை ரஷ்ய நகரங்கள் மூலமாக அடுத்த கட்டமாக மீட்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆகவே அங்கிருக்கின்ற பெல்கோராட், குர்சிக்குக்கு, இந்திய மாணவர்களை வரவழைத்து அங்கிருந்து மீட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. உக்ரைனிலுள்ள மீதமிருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றிய நகருக்கு வரவழைக்கும் பணியில் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.