ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

0
122

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

ஜியோ வந்த பிறகு இணையதள உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இணைய தள சேவையை மலிவான விலையில் வழங்கி உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

ஜியோ வருகையால் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் கட்டணம் 150 ரூபாய்க்கு கொடுத்து கொள்ளை லாபம் பார்த்த மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது இதில் சில நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது.

யாரும் எதிர்பாராத வகையில் இப்படிப்பட்ட புரட்சியை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி அவர்கள் இந்திய மக்களுக்கு பரிசாக அளித்தார்.இந்த ஒரு மாற்றம் தான் இந்தியாவில் மிகப்பெரிய இணையதள சந்தைக்கு வழிவகுத்தது, சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அரசியல் விவாதங்கள், விளம்பரங்கள், வியாபார விளம்பரங்கள், யார் வேண்டுமானாலும் ஊடகத்தை தொடங்கலாம் எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை வெளியிடுவதற்கு எளிதாக கொண்டு செல்லலாம் என்று உன்னதமான பணியை தனது சேவை மூலம் வழங்கி ஜியோ மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஜியோ வந்த பிறகுதான் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் டேட்டா கட்டணத்தை குறைத்தன.
இப்படி இருக்க மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையை மட்டும் வழங்கி வந்தது, இது பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர்களுக்கு மிகப் பெரிய குறையாகவே இருந்தது, காலம் தாழ்த்தி தற்போதுதான் மத்திய அரசு BSNL நிறுவனத்திற்கு 4G சேவையை வழங்கலாம் என்ற ஒப்புதலை வழங்கிவிட்டது.

BSNL நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது, அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கிடைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது, ஏனெனில் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் பல சலுகைகளை மக்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ க்கு நிகராக பிஎஸ்என்எல் வருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

அமைச்சரவையின் இந்த முடிவை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K