இந்திய இராணுவத்தினர் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்க வேண்டும்! மத்திய அரசு அதிரடி உத்தரவு

0
52

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கக்கோரி ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீன படைகள் ஊடுருவியதால் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்தியா சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.இதனை அடுத்து இந்தியா சீனாவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.இந்நிலையில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து வருகின்ற ஜூலை 15ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என மத்திய அரசு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தினர் இந்த செயலிகளை பயன்படுத்தினால் தகவல்கள் கசிய வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.மேலும் வாட்ஸ்அப்,டெலிகிராம்,ட்விட்டர் ஆகிய செயலிகளில் தாங்கள் ராணுவத்தினர் என காட்டிக் கொள்ளாமல் பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K