மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய இனிப்பான செய்தி!

0
99

தமிழ்நாட்டில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு விரைந்து இருக்கின்ற செய்தி குறிப்பின் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியர் கிறிஸ்துவர் சீக்கியர் உத்தமகத்தைச் சார்ந்தவர்கள் பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

அதேபோல 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையில் வாழ்க்கை தொழிற்கல்வி பாலிடெக்னிக் செவிலியர் ஆசிரியர் பட்டய படிப்பு இளநிலை முதுநிலை பட்டய படிப்புகள் போன்ற பல்வேறு நிலையில், பயின்று வருபவருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் துவர்கல்வி அதோடு தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கும் தகுதி மற்றும் வருவாயினடிப்படையிலான கல்வி உதவித்தொகை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம். அதேபோன்று பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையிலும், மத்திய அரசின் இணையதளத்தில் இணையதளம் மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம்.

கல்வி இதயத்தொகை இந்திய அரசின் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் நேரடி பண பரிமாற்றம் மூலமாக மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கல்வி நிலையங்கள் தங்களுடைய கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பிறகு தான் விண்ணப்பங்களை இணையதளத்தில் சரி பார்க்க முடியும்.

புதிதாக விண்ணப்பம் செய்யும் மாணவ, மாணவிகள், இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திட்ட வழிகாட்டி முறைகள் இலக்கிடு தகுதிகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாணவர் கல்வி நிலையங்களுக்காக அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் இணையம் செயல்படும் முறை மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் உள்ளிட்டவைகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியான படிப்புகளின் விவரங்களை இணைதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.