கடலில் விழுந்த மீனவரை மீட்க மத்திய மாநில அரசு உத்தரவு?

0
56

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் இன்னேசியஸ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார்.விழுவதைக் கண்ட மீனவர்கள் அவர்களை மீட்கும் பணியில் முயன்ற போது அவர்களால் காண இயலவில்லை.

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது போன்று கடலில் மாயமாக மீனவர்களை வான்வழியில் மூலம் மீட்க வசதி கோரி கன்னியாகுமரி மாவட்டத்திலோ அல்லது ராமநாதபுரம் மாவட்டத்திலோ ஏற்படுத்தி தருவதாகவும், மாயமான மீனவர் இக்னேசிலை மீட்கவும் கோரி வள்ளவிளையை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் இன்று விசாரணை நடத்தினார்.கடலில் 12 நாட்டிக்கல் தொலைவில் உள்ள மீனவர்களை மாநில அரசுதான் மீட்க வேண்டும் என்றும் அதற்கு அப்பால் விழுந்தால் மத்திய அரசு தேடுதல் பணி மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளது.மேலும் மாயமானவர் குறித்து எவ்வித தகவலும் மத்திய அரசுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதிகள் மத்திய மாநில அரசு உடனடியாக ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர் .இதற்கான அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
Parthipan K