செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா?

0
81
Centil pālāji pōṭṭa aṭutta piḷāṉ! Vaḻakkai nīṭṭippataṟku pōṭṭa tiṭṭamā?
Centil pālāji pōṭṭa aṭutta piḷāṉ! Vaḻakkai nīṭṭippataṟku pōṭṭa tiṭṭamā?

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா?

தற்பொழுது தமிழ்நாட்டில் ஊழல் செய்த  அனைவரிடமும் சோதனை நடத்தி வருகின்றனர்.ஊழல் என்ற பெயரில் யாரேனும் புகார் அளித்தால் அதனை உடனடியாக நடைமுறை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் இருந்தார். அப்பொழுது போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்திருந்தார் தற்போது எஸ் பி வேலுமணி பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது போல் இவரும் 2011 முதல் 2015ஆம் ஆண்டு களில் தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசு வேலை வாங்கித் தருவதாக 81 பேருக்கும் மேல் 1.62 கோடி மோசடி செய்துள்ளார்.

அவ்வாறு பணத்தை கொடுத்து ஏமாந்த கணேஷ்குமார்,தேவசகாயம்,அருண்குமார் என அனைவரும் சென்னை காவல் ஆணையரிடம் செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த புகாரின் மூலம்உழல்சம்மதமாக  41 பேர் உள்ளதாக  போலீசார் தெரிவித்திருந்தனர்.அந்த 41 பேர்களில் 4 பேர் மீது ஒரு வழக்கும் மீதமுள்ள 37 பேர் மீது இரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

இந்த 41 பெயர்களில் செந்தில்பாலாஜி,ராஜ்குமார்,சண்முகம்,அசோக்குமார் போன்ற நால்வரின் மேலுள்ள வழக்கு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையானது சிறப்பு எம்பி,எம்எல்ஏ களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது.அப்பொழுது சண்முகம் தரப்பு வழக்கறிஞர் கூறியது, இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றம் முன்பே ரத்து செய்துவிட்டது என்று தெரிவித்தார்.புகார் தெரிவித்த அனைவரும் பணத்தை திருப்பி  பெற்றுக்கொண்டதாக கூறினர். இதற்கு சம்பந்தமான நகலையும் தாக்கல் செய்தோம்.அதனால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது என்றார்.

ரத்து செய்த நகலை தற்பொழுது தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியிடன் கேட்டுக்கொண்டார். நீதிபதியும் இவ்வழக்கை ஆகஸ்ட் 19ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இரு தினங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி மீது மற்றொரு புதிய வழக்குப் போடப்பட்டது.இந்த வழக்கு சம்பந்தமாக மதுரை அமலாக்க அதிகாரிகள் செந்தில்பாலாஜியை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

அவர்கள் அனுப்பிய கடிதத்தில் இன்று ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால் செந்தில் பாலாஜி ஆஜராகாமல் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறை-யினருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நான் கலந்துகொள்ள உள்ளதால் தற்பொழுது என்னால் ஆஜராக முடியாது. ஒரு மாத காலம் அவகாசம் தருமாறு அக்கடிதத்தில் கூறியுள்ளது.இவர் வழக்கை நீட்டிப்பதற்கு தான் இவ்வாறு கால அவகாசம் கேட்கிறார் என அரசியல் சுற்று வட்டாரங்கள்  கூறுகின்றனர். இதற்கு அமலாக்கத்துறை சம்மதம் தெரிவிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பல ஊழல்களின்  நடுவில் செந்தில் பாலாஜி சிக்கி இருப்பதாகும் முந்தைய வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதாலும் கால அவகாசம் தருவது என்பது சந்தேகத்திற்குரியதே ஆகும்.