பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

0
72
Cema Happy News for School, College and Offices !! Local Holiday.

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த அற்புத நாளில் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும்.

அன்றைய தினம் விரதம் இருந்து கடவுளை வழிபடுவதும், நேர்த்தி கடன் செலுத்துவதும் தனிச்சிறப்பாகும். அதனால் ஆணி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அன்றைய நாளில் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதாவது இருந்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொது தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும் தேர்வு தொடர்பான பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும், இந்த நாளில் நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இல்லாமல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk