கொண்டாடித் தீர்க்கும் அரசியல் கட்சிகள்! கடுப்பில் பொதுமக்கள்!

0
56

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்டு கைதாகி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என திராவிட கட்சிகள் பெருமையாகப் பேசிக் கொள்வது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது, பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக குற்றம் நிரூபிக்கப்படாமல் எதற்காக சிறையில் இருக்க வேண்டும் என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்திருக்கிறது.

ஆனால் இவருடைய விடுதலைக்கு தாங்கள் தான் காரணம் என்று திராவிட கட்சிகள் கொண்டாடி வருகின்றன. அவருடைய விடுதலைக்கும். இந்த அரசியல் கட்சிகளின் கொண்டாட்டத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது அப்பட்டமான உண்மை.

ஆனால் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து இருந்தாலும் அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதாவது, அவர் குற்றவாளி என்று முழுவதுமாக தீர்மானிக்கப்படவில்லை.

குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்டு தான் அவர் கைது செய்யப்பட்டார். அப்படி இருக்கும்போது 31 ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட அவர் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் குறிப்பிட தக்கது.

ஆனால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரையில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதை யாராலும் மறுக்க முடியாது. இருந்தாலும் இந்த அரசியல் கட்சிகளின் முயற்சிகள் காரணமாகத்தான் அவர் தற்போது விடுதலை ஆகி இருக்கிறார் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உச்சநீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தான் அவரை தற்போது விடுதலை செய்திருக்கிறது. ஆனால் இதனை அரசியலாக்கி தங்களுக்கு இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள திராவிடக்கட்சிகள் நினைக்கின்றன.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய பேட்டியில் அதிமுக மட்டுமே பேரறிவாளன் விடுதலை முழுமையான அக்கறையுடன் செயல்பட்டது. அவருடைய விடுதலை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக திமுக தெரிவிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நளினிக்கு தண்டனை குறைத்து மற்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதாவது, அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் விடுதலைக்காக பாடுபட்ட திமுக அரசின் நடவடிக்கைகளை கேலிக்கூத்து என்று விமர்சனம் செய்வது வெட்கக்கேடான ஒரு செயல். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கொஞ்சம்கூட பொருத்தமில்லாதது என தெரிவித்து இருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் விடுதலைக்கு நாங்கள் தான் காரணம் என 2 கட்சிகளும் பெருமையடித்துக் கொள்வது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.