பேஸ்புக் ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த சி.இ. ஓ

0
77

உலகளவில் ஆன பொருளாதாரம் அந்த நிலைக்கு இடையில் சமூக ஊடக வருவாயை குறைத்துக் கொண்டிருப்பதால் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்கில் சுமார் 12000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதம் பேரை குறைக்கிறது.

சென்ற மாத இறுதியில் மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க் நிறுவனம் பணியமருத்துவதை நிறுத்துவதாகவும், அடுத்த வருடத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை சீராக குறைக்கும் எனவும் அறிவித்தார்.

ஒரு செய்தி தள இன்சைடர் அறிக்கையின்படி மார்க் ஜூக்கர்பெர்க் நிறுவனத்தின் குழுவில் இருக்கின்ற இயக்குனர்களிடம் சிறப்பாக செயல்படாத பயிற்சி தேவைப்படும் 15 சதவீதத்தை யாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த 15 சதவீதம் நபர்களை தனியாக பிரித்து பயிற்சி வழங்கி மீண்டும் சேர்க்க இருக்கின்றார்களா? அல்லது நீக்க போகிறார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த 15 சதவீதம் PIP செயல்திறன் மேம்பாட்டு திட்டத்தில் வைக்கப்பட்டு விடப்படலாம் என்று ஒரு ஊழியர் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பேஸ்புக் தலைமை நிர்வாகி ஊழியர்கள் இடையான கேள்வி பதில் நேரத்தில் நிறுவனத்தின் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் அதனை சரி செய்ய பணியாளர்கள் விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பல பெரிய நிறுவனங்கள் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உலகளாவிய மந்த நிலையின் அதிகரித்து வரும் அபாயத்திற்கு இடையில் தங்களுடைய பணியாளர்களை குறைத்துக் கொள்ள தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள், பணியமர்த்தலை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இப்போது பேஸ்புக் நிறுவனமும் செலவினங்களை குறைப்பதற்கும், செயல்பாட்டு வருகை பராமரிப்பதற்கும், ஏதுவாக இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என சொல்லப்படுகிறது.