நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

0
108
CDET exam starting tomorrow! Central Board of Secondary Education announced!
CDET exam starting tomorrow! Central Board of Secondary Education announced!

நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தலில் படி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி என இரு மாதங்களிலும் ஆன்லைன் முறையில் நடடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மத்திய அரசு சார்பில் எந்தெந்த பள்ளிகள் செயல்படுகின்றது என்ற அடிப்படையில் கேந்திரிய வித்யாலயா,நவோதயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ சார்பில் தேர்வுகள் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு கணினித் தேர்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நடத்தப்படுவது வழக்கம்.தேர்வுக்கான நுழைவு சீட்டில் தேர்வுக்கான சரியான தேதி குறிப்பிடப்படும்.இந்த தேர்வு எழுத விண்ணப்பம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முதல் தொடங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த சிடெட் தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.மீதமுள்ள சிடெட் ஜனவரி 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த தேர்வு நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலவசக் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த சிடெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.மேலும் இந்த தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K