சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!

0
67

நோய் தொற்று காரணமாக, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை என்ன என்பதை சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து 40 சதவீதம் 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து தலா 30 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். ஜூலை 31 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிட்டு பள்ளிகள் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், பல பள்ளிகள் இந்த பணிகளை முடிக்க காரணத்தால், மதிப்பெண் கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பரத்வாஜ் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதற்கு பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் ஜூலை மாதம் 25ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களை இறுதி செய்வதில் பள்ளிகளுக்கு உதவுவதற்காக தலைமையகத்தில் தேர்வுப் பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதனை பயன்படுத்திக்கொண்டே பள்ளிகள் அதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். 25ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை கணக்கிட பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவில் இன்னொரு அறிவிப்பையும் சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கிறது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரையில் அனைத்து வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்றி பொது தேர்வு நடத்தப்படும் வழக்கமான மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு முறையை பின்பற்ற இயலாது என்ற காரணத்தால், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவது அவசியமாகிறது. உயர்கல்வியில் சேர்வதில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமும் இல்லாமல் இருப்பதற்கு அவர்களுடைய முடிவுகள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.