சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை!

0
88
CBS exams canceled! Chief's next request!
CBS exams canceled! Chief's next request!

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை!

இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசிடம் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.அதில் அவர் கூறியது,சிபிஎஸ்இ 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் மே 4 தொடங்கயிருக்கிறது.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் இந்தநிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

அவ்வாறு தொற்று பரவினால் தேர்வு மையம் முழுவதும் கொரோனாவின் தீவீர மையமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாணவர்களை தேர்வெழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும்.அவ்வாறு தேர்வு எழுதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பும் மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

அதற்கடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஎஸ் தேர்வுகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,10  மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ் சி பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும்.டெல்லியில் எழுதப்போகும் 6 லட்சம் மாணவர்களின் உயிரும் உடல்நலமும் மிகவும் முக்கியம்.

1 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதிக அளவு கொரோனா பரவ வாய்புகள் உள்ளது.அதனால் இந்தேர்வு நடத்துவதில் மறு பரிசீலனை நடத்த வேண்டும்.இந்த கொரானாவின் 2வது அலை மிகவும் மோசமானது அந்தவகையில் என்னிடம் உள்ள தகவலின் படி கடந்த 24மணி நேரத்தில் டெல்லியில் 13,500 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுகளை ஆன்லைன் முறைப்படி நடத்தலாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.அதேபோல் மக்கள் அனைவரும் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும் என கூறினார்