அல்சர் ஏற்பட காரணம்! இந்த உணவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்!

0
205
#image_title

அல்சர் ஏற்பட காரணம்! இந்த உணவை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்!

அல்சர் வருவதை தடுக்கும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் நம் வேலைகளை நோக்கி செல்கிறோம். இதன் விளைவாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் போதிய உணவின்மையின் காரணமாக நம் உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதில் ஒன்று அல்சர் பிரச்சனை இவை நம் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதனை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.

அல்சரை தடுக்கும் முதல் வழி நேரத்திற்கு உணவினை சரிவர எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் காரணமாக அல்சர் ஏற்படுகிறது. புகை பிடிப்பவர்களுக்கும் மது அருந்துவதற்கு வயிற்றில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே புகை மது ஆகிய இரண்டையும் தவிர்க்க வேண்டும்.

நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் காரமாக இருந்தாலும் அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டாலோ அல்சர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவே காரம் குறைவான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையினை குறைப்பதற்கு நம் உடலுக்கு தேவையான உணவுகளின் அளவைவிட மிகக் குறைவாக எடுத்துக் கொள்வதாலும் அல்சர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே நம் உடலுக்கு தேவையான அளவு உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

தினசரி ஒரு டம்ளர் பால் அல்லது உணவுகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து சாப்பிட்டு வருவதன் காரணமாக அல்சர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும்.

author avatar
Parthipan K