கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்!

0
121
Cattle anthrax serial death? People in panic!
Cattle anthrax serial death? People in panic!

கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்!

கேரளாவில் ஆந்திரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் பல காட்டிப்பன்றிகள் உயிரிழந்துள்ளன. இதனால் ஆந்திர பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் விசாரணை நடத்த மேற்கொண்டனர். இவற்றை சோதனை செய்யப்பட்டபோது அனைத்து பன்றிகளும் தாக்கியது ஆந்த்ராக்ஸ் நோய் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்த்ராக்ஸ் நோய் என்பது ஆந்த்ராக்ஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகள் ஐந்து ஆண்டுக்கு மேலான வளிமண்டத்தில் உயிர் வாழ முடியும். ஆந்த்ராக்ஸ் நோயானது அனைத்து பாலூட்டிகளையும் கடுமையாக பாதிக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அவற்றின் சடலங்களுடன் நேரடி தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. பாக்டீரியா உடலை விட்டு வெளியேறி காற்றுடன் தொடர்பு கொண்டவுடன் அவை உடனடியாக வித்திகளாக மாறுகின்றன.

இயற்கையாகவே மண்ணில் காணப்படும் ஆந்த்ராக்ஸ் என்ற பாக்டீரியா பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தத் தொற்றால் வீட்டு விலங்கு மற்றும் வனவிலங்கு அனைத்தும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறது.  காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இறப்பது கண்டறியப்பட்டால் உடனே  சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இது போன்ற இடங்களுக்கு மக்கள் செல்லக்கூடாது. ஆந்த்ராக்ஸ் நொயல் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொண்ட மற்றும் வெளியே உள்ள அனைத்து விலங்குகளும் நோய் தடுப்பு ஆண்டிபயாடிக் சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தவேண்டும். அதுமட்டுமின்றி  கூட்டில் அடைக்கப்பட்ட விலங்குகளுக்கும் நோய் பரவுவதை தடுக்கும் ஆண்டிபயாடிக் சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை போட வேண்டும்.

author avatar
CineDesk