அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல்! காவல்துறை எதிர்த்து அதிரடி ஆக்‌ஷன்!

0
72

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முதல் குறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 200 பேர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதோடு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிமுகவின் அலுவலகத்தில் நேற்று பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாதலில் காவல்துறையைச் சேர்ந்த 2️ பேரும் மற்றும் தனிநபர் ஒருவர் உட்பட 47 பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கலவரத்தை தூண்டுதல் போன்ற 6️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அலுவலகத்தின் உரிமையை கோருவது குறித்து ஏற்பட்ட பிரச்சனை என்ற காரணத்தால், போதுமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தென் சென்னை வருவாய் கோட்ட அலுவலரிடம் ராயப்பேட்டை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனடிப்படையில் ஆவணங்களை ஆய்வு செய்த கோட்டாட்சியர் கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்பதை முடிவு செய்வதற்கு இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வருகின்ற 25ஆம் தேதி ஆஜராக வேண்டும்  என இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அத்துடன் பொது அமைதியை காக்கும் விதமாக பிரச்சனைக்குரிய கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து போதுமான பாதுகாப்பு வழங்க ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இரு தரப்பினரும் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவுகளை பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் தலைமை அலுவலக சொத்துக்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியரை நியமனம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டதாக காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது ஆகவே இரு தரப்பையும் சேர்ந்த பாலா 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.