பண மோசடி வழக்கு! அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

0
54

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய தமிழக மண் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர், உள்ளிட்டோருக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்து இலட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தார்கள்.

இந்த வழக்கு சென்னையிலிருக்கின்ற சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இதற்கு நடுவே இந்த மோசடியின் மூலமாக சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும், கடந்த வருடம் வழக்கு பதிவு செய்தது.

இந்த விளக்கு விசாரணைக்கு ஆஜராக மாறு அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவருக்கு அமலாக்கத்துறை மூலமாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சமனை எதிர்க்கும் விதமாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த 1ம் தேதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இப்படியான நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தன்னுடைய தரப்பு கருத்தையும், வாதத்தையும், கேட்க வேண்டும் என்று தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ராம்சங்கர் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் மற்றொரு விவகாரத்தில் பொறியாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட காவல் துறையின் தரப்பு சாட்சியாக இருந்த தர்மராஜ் என்பவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் மெக்கானிக்கல் பொறியாளரான தர்மராஜுக்கு போதுமான தகுதி இருந்தும் சென்னை மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலை கிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபர்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும், புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனு மீது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு நடுவில் ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும், அந்த வழக்குடன் ஒன்றிணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ் அப்துல் நாசிர், ராமசுப்பிரமணியன், உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்திருக்கிறார்கள்.

அதோடு பண மோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும், உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கின்றன இந்த தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.