செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை! காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு!

0
72

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் வழங்கினர்.

இந்த விவகாரம் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல்துறையினர் வழக்கை கிடப்பில் போட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் சைபர் கிரைம் அவர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்தது. ஆனால் செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தற்சமயம் இந்த வழக்கு சென்னை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு தரப்பில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வடக்கறிஞர் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளதாக வாதம் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எத்தனை வழக்குகளில் அமலாக்கத்துறை தங்களை இணைத்துக் கொள்வது? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

ஆனால் எந்த செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று முத்திரை குத்தி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தாரோ, அதே செந்தில் பாலாஜியை தான் தற்போது தன்னுடைய அமைச்சரவையில் முக்கிய இலாக்காவின் அமைச்சராக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பணமோசறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் மீது சரமாரியான விமர்சனத்தை முன் வைத்தவர் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்படி எல்லாம் விமர்சனம் செய்துவிட்டு தற்போது எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் அவரையே தன்னுடைய அமைச்சரவையில் முக்கிய இலாக்காவின் அமைச்சராக வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இவற்றை தான் மறைமுகமாக சுட்டிக் காட்டும் விதமாக பாஜகவினர் குற்றம் சாட்டை வருகிறார்கள் ஒருவர் மீது தேவை என்றால் குற்றம் சொல்வது தேவை இல்லை என்றால் அவரையே நண்பராக்கி போற்றுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் திமுக ஈடுபடுகிறது என்று நேற்றைய தினம் பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் மற்றும் அறிஞர் அண்ணா காலத்து தமிழக அரசியல் ஆரோக்யமாக காணப்பட்டது. ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் பெரிய அளவில் ஆரோக்கியத்துடன் காணப்படவில்லை.

ஒருவர் தேவை இல்லை என்றால் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துவது, பழி போடுவது, அவரை விமர்சனம் செய்வது இது போன்ற செயல்களில் பல அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அதே நேரம் ஒருவர் தேவைப்படுகிறார். என்றால் அவர் மீது முந்தைய காலகட்டத்தில் தாங்கள் வைத்த அனைத்து விமர்சனங்களையும்  மறந்துவிட்டு அவருடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள். யாரேனும் கேட்டால் அரசியலில் நிரந்தர எதிரியும் அல்ல, நிரந்தர நண்பனும் அல்ல என்ற ஒரு வசனத்தை நிரந்தரமாகவே வைத்துக் கொண்டார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

எது எப்படியோ அவர்களுக்குள் தேவை என்றால் ஆறதழுவி கொள்வதும் தேவையில்லை என்றால் குற்றம் சுமத்துவதும் அவர்கள் அரசியலில் செய்யும் ஒரு விளையாட்டு என்றால் இந்த விளையாட்டுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது விவரம் அறியாத பாமர மக்களும், நடுத்தர மக்களும் தான்.