கேப்டனாக பொறுப்பேற்று முதல் முறையாக பேட்டியளித்தார் ரோகித்சர்மா! என்ன சொன்னார் தெரியுமா?

0
137

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய சூழ்நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்ற ஒருநாள் தொடரில் இருந்து ரோகித்சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கேப்டனாக நியமனம் செய்யபட்டிருக்கும் ரோகித்சர்மா முதல்முறையாக பேட்டி அளித்து இருக்கிறார். அதில் உரையாற்றிய அவர் இந்திய அணிக்காக விளையாடும் போது பிரஷர் சற்று அதிகமாகவே இருக்கிறது. அந்த அழுத்தம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் மக்கள் எப்போதும் நேர்மறையாக அல்லது எதிர்மறையாகவோ பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு கிரிக்கெட் வீரனாக இதை நான் சொல்கின்றேன் தற்சமயம் நான் என்னுடைய வேலையில் கவனம் செலுத்துவது தான் முக்கியம். அதைவிடுத்து பொதுமக்கள் பேசுவது தொடர்பாக கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் பேசுவதை நம்மால் நிறுத்திவிட இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

நான் இது தொடர்பாக பலமுறை தெரிவித்துவிட்டேன், அதை சொல்லிக் கொண்டே தான் இருப்பேன், இதுபோல நாங்கள் ஒரு உயர்தர போட்டியை விளையாடும் போது அதிகமாக அழுத்தம் உண்டாகும் என்பதை அணியின் வீரர்கள் கூட புரிந்து கொள்கிறார்கள்.

நம்மிடம் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம், அதாவது விளையாடுவதற்கு சென்று வெற்றி பெறுவது, நீங்கள் விளையாட தெரிந்த வழியில் விளையாடுவது, வெளியில் நடைபெறும் பேச்சுக்கள் முக்கியம் அற்றவை என்று நான் கருதுகிறேன். எங்களைப் பொறுத்தவரையில் நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.

X,y,z தொடர்பாக நான் நினைப்பது முக்கியமானது ஏனென்றால் நீங்கள் வீரர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள். அதுவே நாங்கள் விரும்பும் இலக்கை அடைய எங்களுக்கு உதவியாக இருக்கும் ராகுல் டிராவிட் வெளிப்படையாக அதை செய்ய எங்களுக்கு உதவ இருக்கின்றார் ஆகவே நாங்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்