மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!

0
78
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அமையும். குடும்ப உறவு பக்கபலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும்‌. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் அதன் மூலம் புதிய ஒப்பந்தங்கள் அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சில சந்தோச செய்திகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk