வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா… அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க!!

0
56

 

வாய்ப் புண்ணால் ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியவில்லையா… அப்போ வாய்ப்புண் குணமாக இதை பண்ணுங்க…

 

நமக்கு வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிட முடியாத நிலைமை ஏற்படுகின்றது. இந்த வாய்ப்புண்ணை குணப்படுத்துவதற்கு நாம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். கீரை வகைகளை வாங்கி சாப்பிடுவோம்.

 

இது மட்டுமில்லாமல் வாய்ப்புண் குணமாக வேண்டும் என்று மருத்துவரை அணுகுவோம். மருத்துவர் ஏற்கனவே உள்ள வாய்ப்புண் குணமாக மருந்து கொடுப்பார். ஆனால் வாய்ப்புண் குணமான பின்னர் மீண்டும் வாய்ப்புண் நமக்கு ஏற்படும். நாம் மறுபடியும் மருத்துவரை அணுக வேண்டும். அல்லது கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டும்.

 

அவ்வாறு எவ்வளவு முறை செய்ய.முடியும். இதனால் நேரமும் பணமும் வீணாகின்றது. இதையடுத்து இந்த வாய்ப்புண்ணை எளிமையான முறையில் வீட்டிலேயே குணப்படுத்த சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

வாய்ப்புண் குணமாக சில வழிமுறைகள்…

 

* உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கக் கூடிய துளசி இலைகளை 5 பறித்து அதை வாயில் பேட்டு மென்றால் வாய்ப்புண் குணமாகும். எனவே வாய்ப்புண் உள்ளவர்கள் துளசி இலையை பயன்படுத்துங்கள்.

 

* வாய்ப்புண் குணமாக கசகச சிறப்பான மருந்து பொருள் ஆகும். ஒரு ஸ்பூன் கசகசாவை எடுத்து அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

 

* வாய்ப்புண் உள்ளவர்கள் அனைவரும் தேங்காய் எண்ணெயை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் ஆறிவிடும். மேலும் வயிறு குளிர்ச்சியடையும்.

 

* அதிக சத்துக்கள் உள்ள மஞ்சள் பொடியை வைத்தும் நமக்கு ஏற்படும் வாய்ப்புண்களை குணப்படுத்தலாம். மஞ்சள் பொடியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை பேஸ்ட் போல தயார் செய்து அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வாய்ப்புண் குணமாகி விடும்.