உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

0
74

திமுகவிற்கு இணையாக சப்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

ஜெயலலிதா போலவே தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தயார் செய்து பிரசாரத்தை ஆரம்பிப்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று சொல்கிறார்கள் அதே நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குகிறார்கள் காங்கிரஸ் சார்பாக யார் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதோடு திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக உளவுத்துறை மூலமாக எடப்பாடி பழனிச்சாமி மிகத்தீவிரமாக தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.

தேர்தல் களத்தில் திமுகவை எதிர்த்து வெல்வதைவிட அந்த கூட்டணியில் இருக்கின்ற மதிமுக விசிக காங்கிரஸ் போன்ற கட்சிகளை மிக எளிதாக வென்று விடலாம் என்பதே கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அதிமுகவிற்கு கற்றுத்தந்த பாடம் சென்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நேருக்கு நேராக போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது ஆகவே இந்த முறையும் அதே பாணியில் முடிந்த அளவிற்கு திமுகவுடன் நேரடியாக மோதுவது விடவும் காங்கிரஸ் போன்ற திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தும் வியூகமும் முதல்வரிடம் இருக்கின்றது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின்னர் ஏற்படும் தாக்கத்தை பொறுத்தே கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தும் முடிவில் இருக்கின்றார் முதல்வர் முடிந்த அளவிற்கு கூட்டணியை இறுதி செய்து விட்டு தேர்தல் பிரச்சாரம் மற்றும் மற்ற பணிகளை ஜனவரி மாதம் இறுதியில் பணிகளை வேகப் படுத்தினால் தான் திமுகவிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த இயலும் என்று முதல்வர் உறுதியாக நம்புகின்றார் இதற்கு ஏற்றவாறு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உத்தேச வேட்பாளர் பட்டியலை எடப்பாடிபழனிசாமி தயாரித்து விட்டதாக தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய அமைச்சர்களுக்கு அவர்களுடைய தொகுதியில் இருக்கின்ற செல்வாக்கு மறுபடியும் அவர்களை வேட்பாளராக அறிவித்தால் வெற்றி கிடைக்குமா அதேபோல இப்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் யார் யார் தொகுதிகளில் நல்ல பெயருடன் இருக்கிறார்கள் என்ற விவரங்களை உளவுத்துறை மூலமாக சேகரித்து வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் ஏறக்குறைய ஒரு முடிவிற்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவிக்கப்படுகின்றது அதோடு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் அவர்களின் பின்புலம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்பு தொடர்பாக உளவுத்துறை இப்போது தகவலை சேகரித்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.

அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்காக தேர்தல் வியூகம் வகுத்து வரும் சுனில் நிறுவனமும் தமிழகம் முழுவதும் தனியாக சர்வே எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு எடுக்கப்படும் சர்வேக்களின் அடிப்படையில்தான் இந்த முறை வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று சொல்கிறார்கள் சென்ற முறை திமுக என்ன செய்ததோ அதையேதான் இப்போது அதிமுக செய்யப்போகிறதாம் மற்றபடி விருப்ப மனு தாக்கல் நேர்காணல் போன்ற அனைத்துமே ஜெயலலிதா இருந்தபோது நடந்தது போலவே இருக்கும் என்று சொல்கிறார்கள்.