கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் உண்டாகும் நாள்!!

0
115
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் உண்டாகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் உண்டாகும் நாள். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் அதனை தவிர்த்து மகிழ்ச்சி உடன் இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அற்புதமாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சுபிட்சமான பாதை தென்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக இருப்பார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani