கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதிற்கினிய தகவல் வந்து சேரும் நாள்!!

0
178
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதிற்கினிய தகவல் வந்து சேரும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதிற்கினிய தகவல் வந்து சேரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்தா மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் ஒரு அளவிற்கு உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாகவும் லாபகரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அருமையாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் ரசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani