கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
86

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைய தினம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் இருப்பதால் சங்கடங்கள் குடி கொள்ளலாம். பேசும் வார்த்தைகளில் கவனம் வைப்பது நல்லது. உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் அவசியம். கணவன் மனைவிக்கிடையே பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தேவையற்ற விஷயங்களை தலையிடுவார்கள்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு பட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் கவனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். காதலர்கள் கவனமாக பழகுவது நன்மையைக் தரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கலாம். இல்லத்தரசிகளுக்கு உடலில் ஒரு வித இன்னல்கள் வந்து நீங்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani