கடகம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சியான நாள்!!

0
64
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சியான நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வண்ணத்துப்பூச்சி சிறகடிப்பது போன்ற நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும்.

 

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வட்டாரம் விரிவடையும்.

 

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வளர்ச்சி அடைவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani