அரசு தேர்வு ரத்து! இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் உத்தரவு!

0
110
Cancel the government exam! Interim restraining order of the court!
Cancel the government exam! Interim restraining order of the court!

அரசு தேர்வு ரத்து! இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் உத்தரவு!

ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் சமையலர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில் பணி நியமன ஆணையை வழங்க கோரி வசந்த் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர்மற்றும் பிற்பட்டோர் நல விடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலி பணியிடங்களும், ஆயிரக்கணக்கான சமையல் பணியிடங்களும் காலியாக உள்ளன.

அதாவது தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 1384 ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் இருக்கின்றன. உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தனர். இதையடுத்து ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள வார்டன் மற்றும் சமையலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் உள்ள அனைத்து குறைகளையும் ஒரு மாத காலத்திற்குள் கண்டிப்பாக தீர்த்து  வைக்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணன் அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளோ மேற்கொண்டு வந்தனர். இதனுடைய ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலா தேர்விற்காக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சமையலர் தேர்வு எழுதியவர்கள் பணி ஆணையம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகளை விடுத்திருந்த நிலையில் விடுதி சமையலர் தெரிவிக்காக அறிவிப்பை ரத்து செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்குழுவின் முக்கிய பணி உரிய நபர்களை தேர்வு செய்வது தான் எனவும் உயர்நிதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

author avatar
CineDesk