தலைமறைவான பிரதமருக்கு கொரோனா! அதிர்ச்சியில் கனடா மக்கள்!

0
80

ரகசிய இடத்தில் தலைமறைவாகியுள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கோரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, உலக நாடுகள், தங்கள் நாட்டினரையும், தங்கள் நாட்டுக்கு வருவோரையும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்திள்ளன. இதே போன்று, கனடாவிலும், அமெரிக்காவில் இருந்து வரும் ஊர்தி ஓட்டிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊர்தி ஓட்டிகள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கனட எல்லையிலும், முக்கிய நகரங்களிலும் சரக்குந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகர் ஒட்டவாவிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வது தங்களது தனிப்பட்ட உரிமை என்றும், அதனை கட்டாயமாக்கக் கூடாது என்றும் சிலர் முழக்கமிட்டு வருகின்றனர்.

மேலும், தேவையில்லாத சட்டங்களைப் போட்டு மக்களை பீதி அடைய செய்வதாக குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்றும் கூறுகின்றனர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பிரதமர் அலுவலகத்தில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்திற்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளது. இதை அவர் உறுதி செய்துள்ளார். மேலும், போராட்டம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், தலைநகரில் போராட்டம் நடத்தும் சிலரது நடவடிக்கையால் கனடிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறு வணிகர்களை தாக்குவது, வீடற்றோரை மிரட்டி உணவுகளை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டு பயப்பட மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனவாத கொடிகளை பறக்க விட்டு, நாட்டின் ராணுவத்தை அவமதிப்போரிடம் நாங்கள அடி பணிய மாட்டோம்.

இது போன்ற நடவடிக்கைகளுக்கு கனடாவில் இடமில்லை. போராட்டத்திற்கு போறுப்பானவர்கள் உடனே இதனை நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தைரியமாக இருங்கள், அதே நேரத்தில் வெறுப்புப் பேச்சுக்கள், சகிப்புத் தன்மை மற்றும் வெறுப்புடன் நிற்காதீர்கள், என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக் கொண்டுள்ளார்.