தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா!

0
206
Can this be done in the exam? Police action! Come to us!
Can this be done in the exam? Police action! Come to us!

தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா!

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். புதியதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று உடல்தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள  ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று காலை உடல்தகுதி தேர்வுகள் நடைபெற்றது.

இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், மார்பின் அளவு உள்ளிட்ட உடல் தகுதி தேர்வுகள் அனைத்தும் நடந்தது. அப்போது தேர்வில் கலந்து கொண்ட இரண்டு வாலிபர்களின் தலை மட்டும் சற்று உயரமாக இருந்தது. போலீஸ் அதிகாரிகள் இந்த வித்தியாசத்தை கவனித்தனர். அதனை தொடர்ந்து அந்த 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் வைத்து சோதனை செய்தபோது, போலீசாரே ஆச்சரியப்பட்டனர். அதிர்ந்தும் போயினர்.

அதன் பின்னர் அந்த இரண்டு வாலிபர்களுக்கும்  சோதனை நடத்தப்பட்டது. அப்போது தங்களது தலையில் அவர்கள் இருவரும் விக் வைத்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அதனுள் தெர்மாகோல் வைத்து நிரப்பியும் இருந்தனர். இப்படி இருந்ததன் காரணமாக அவர்களின் உயரம் சற்று அதிகரித்து இருந்தது. அவர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாக உயரம் குறைவாக இருந்துள்ளனர். இதன் காரணமாக அவ்வாறு செய்துள்ளனர்.

இதனால் உடல் தகுதித் தேர்வில் தங்களது உயரத்தை அதிகரித்து காட்ட இதை சாதகமாக  வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு வாலிபர்களும் கைதும் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது அவர்கள் இருவரும் பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகா, ஜாகானூறு கிராமத்தைச் சேர்ந்த பாலேஷ் துரதுண்டி என்ற 27 வயது என்பதும் மூடலகியை சேர்ந்த உமேஷ் 28 வயது என்பதும் தெரிந்தது.

மேலும் அவர்கள் 2 பேர் மீதும் பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தினால் நேற்று அங்கு  சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.