இனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை

0
70

இனிமேல் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாநிலத்திற்குள் உள்ள எந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கும் இ பாஸ் கட்டாயமில்லை என மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இபாஸ் குறித்து அனைத்து மாநில செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி, ஒரு மாநிலத்தில் இருந்து எந்த ஒரு மாநிலத்திற்கு செல்வதற்கும், அந்த மாநிலத்தின் பகுதிக்குள் பயணிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது.

மேலும் பயணத்துக்கு என எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல், தனியாக அனுமதி மற்றும் ஒப்புதல், இ பாஸ் என எதுவும் இல்லாமல் பயணிகளை அனுமதிக்கலாம்” என மத்திய உள்துறை செயலகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K