மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி?

0
64
Can it be claimed as a right to wear burdha when other religions are wearing uniform? Sessions court question?
Can it be claimed as a right to wear burdha when other religions are wearing uniform? Sessions court question?

மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி?

பள்ளி மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை அனைவரும்  சீருடைகள் தான் அணிந்து வருகின்றனர்.அதன்படி அனைத்து மாணவிகளும் சீருடையில் வரும் போது முஸ்லீம் மாணவிகள் மட்டும் பர்தா அணிந்து வரும் போது அவர்களின் உரிமை என்று கூற முடியுமா என உச்ச நீதி மன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

முற்றிலுமாக கல்வி நிலையங்களில் படித்து வரும் முஸ்லீம் மாணவிகள் பர்தா எனப்படும் தலை மற்றும் முகத்தை மூடும் ஆடைகள் அணிந்து வருகிறார்கள்.மேலும் இது தொடர்பாக பெங்களூரு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

அந்த தீர்ப்பில் அனைத்து முஸ்லீம் மாணவிகளும் பர்தா அணிவது கட்டாயமான மத சம்பிரதாயம் கிடையாது என்று கூறப்பட்டது.இந்த தீர்ப்பை தொடர்ந்து பல மூஸ்லீம்கள் எதிர்த்து வந்திருந்த நிலையில் இதில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா,சுதான்ஷி துலியா அடங்கிய உச்ச நீதி மன்ற அமர்வு தினமும் விசாரித்து வருகின்றது.

இந்நிலையி நேற்று நடந்த விசாரணையின் போது அமர்வு கூறியதாவது ,எந்த உடை அணிவது என்பது உரிமை என்று கூறுவது போல் எந்த உடை அணியக் கூடாது என்பது கூறுவதும் உரிமையாகுமா?

மற்ற மதத்தினர் சீருடையை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?இது சரியானதல்ல என்று பல கேள்விகளை முன் வைத்தது அமர்வு நீதிமன்றம்.இதற்கான தீர்வை விரைவில் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K