அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!

0
111

திமுக உடைய அதிகார பலத்தையும் ரவுடி சொத்தையும் எதிர்கொள்வதற்காக அதிமுக கூட்டணியை தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர்களிடம் அந்த கட்சியின் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பாஜகவின் பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, உள்ளிட்டோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

அந்த சமயத்தில், அதிமுக கூட்டணியை தொடரலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என மேலிடப் பொறுப்பாளர்கள் தெரிவித்தார்கள்.

அதற்கு ஒரு சிலர் சட்டசபைத் தேர்தல் மற்றும் 9 மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் கேட்ட இடங்களை கொடுக்கவில்லை. இடங்களை ஒதுக்குவதில் கடைசி நேரம் வரையில் இழுத்தடிப்பு செய்வது கவலை தருகிறது. இதையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் செய்வார்கள் தெரிந்துகொள்ள சுயபரிசோதனை செய்ய வேண்டும், அதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தான் நன்று அதிமுக கூட்டணி வேண்டாம் என்று தெரிவித்தார்கள். ஆனாலும், இன்னும் சிலர் இறைவன் நம்பிக்கை ஒழித்த கொள்கைகள் போன்ற சித்தாந்த அடிப்படையில் பாஜகவுடன் அதிமுக ஒத்துப் போகின்றது. திமுகவின் அதிகார பலம், பண பலத்தை, பாஜக தனித்து எதிர்கொள்ள இயலாது. இந்த சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது தான் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். இந்த விபரங்களை தேசிய தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக மேலிடப் பொறுப்பாளர்கள் தெரிவித்தார்கள், இவ்வாறு அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.