ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி நாளை நீல நிலா என்று அழைப்பு !! சில மாதத்திற்கு ஒரு முறை தோன்றும் அதிசய நிகழ்வு !!

0
100

பௌர்ணமி நாளான இன்று (ஆக.31) வானில் நீல நிலா தோன்றும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒரு மாதத்திற்கு ஒரு பௌர்ணமி ,ஒரு அமாவாசை வரும். ஆனால், எப்போதாவது ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி ஏற்படும். அந்த வகையில் இந்த மாதம் இன்று இரண்டாவது பவுர்ணமி வந்துள்ளது.இந்த மாதத்தில் ஒன்றாம் தேதி பௌர்ணமி தோன்றிய நிலையில் இரண்டாவது பௌர்ணமியாக ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 8.19 மணிக்கு தோன்ற உள்ளது.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முழு நிலவு தெரியும் நாளை ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நீல நிறத்தில் நிலா தெரிவதில்லை. மற்ற நாட்களைப் போலவே தெரியும். ஆனால் அறிவியல் ரீதியாக நீல நிலா என்று அழைக்கப்படுகிறது.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 29.530 நாட்கள் அதாவது 29 நாட்கள், 12 மணி, 34 நிமிடம், 38 வினாடிகள் , எடுத்துக் கொள்ளும் . கூடுதல் நேரத்தை சேர்த்து கணிக்கும் பொழுது ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒரு முறை நீல நிலா நிகழ்வு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிகழ்வு பிப்ரவரி மாதம் 28 அல்லது 29ஆம் தேதி என்பதனால் நீல நிலா என்று அழைக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்வு வரும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

author avatar
Parthipan K