இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

0
122
Cabinet meeting on behalf of the Chief Minister this evening!. All the demands of the people will be fulfilled.. M.K. Stalin's announcement!!
Cabinet meeting on behalf of the Chief Minister this evening!. All the demands of the people will be fulfilled.. M.K. Stalin's announcement!!

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு மேல்  சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர்கள், உயர் அதிகாரிகள்   மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளார்கள்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆலோசனை செய்து அதற்கு தகுந்த முடியுகளை எடுக்க உள்ளார்கள்.மேலும் குறிப்பாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 27 ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டிருந்தது.

608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் ஜெயலலிதாவிற்கு என்னென்ன நோய் இருந்தது? அவருக்கு அளித்த மருந்துகளின் விவரங்கள் எங்கே?அவருக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது? வெளிநாட்டுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது ஏன்?மேலும் விரைவில் மருத்துவர்கள் செயல்படாதது ஏன் ?என்பது உள்பட பல்வேறு தகவல்கள் மற்றும் கேள்விகள் அதில் எழுந்துள்ளது.

ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம், சசிகலாவின் வாக்குமூலம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது.இந்நிலையில் அறிக்கையை சட்டசபை கூடும்போது வெளியிடலாமா?என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுவும் இன்னும் மக்களின் பார்வைக்கு வெளியிடாமல் இருக்கிறது.இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆய்வு கூட்டங்கள் நடத்தி விவாதித்துள்ள நிலையில் இப்போது அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதில் முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் என்னென்ன என்பது பற்றி இன்று இரவு அறிவிப்பாக வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் தலைமை செயலாளர் ஆய்வு கூடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K