வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!

0
83

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 1500வழக்குகள் பதிவாகியிருக்கிறது ஒருசில வழக்குகளை தவிர எல்லா வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற இந்த அறிவிப்பின் மூலமாக தமிழகம் முழுவதிலும் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன முக கவசம் அணியாதது ஊரடங்கு சமயத்தில் வெளியில் திரிந்தது , அதோடு காவல்துறையினருக்கு இடையூறாக இருந்தது போன்ற பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

அதேபோல கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை ரத்து செய்வதற்கான பரிசீலனை நடந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.