குடியுரிமை சட்டத் திருத்த மசோதா! நாடு முழுவதும் வன்முறை 15க்கும் மேற்பட்டோர் பலி?

0
75

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிர கட்டத்தை எட்டி வருகின்றன.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டெல்லி, பெங்களூரு, சென்னை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி, மாணவர்கள், தொடர்ந்து பல்வேறு முறைகளில் போராடி வருகின்றனர் ரயில் மறியல் போன்ற போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.உத்திரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது இதில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் . மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

author avatar
CineDesk