குடியுரிமை சட்டத் திருத்த மசோதா!திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா?

0
66

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிர கட்டத்தை எட்டி வருகின்றன.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளை தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருந்த நிலையில்.

தி.மு.க. வின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தி.மு.க. பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு சென்றுள்ளதால் சென்னையில் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் தி.மு.க. பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk