இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

0
73

வரும் 29- ஆம் தேதி காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  மற்றும் 64 பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விவகாரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா, கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அவர் பேசியுள்ளார்.

ஒரு மக்களவைத் தொகுதியில் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 64 பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாகவும், அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 29-ஆம் தேதி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தோற்று பரவி வரும் இந்த சூழலில், இடைத்தேர்தல் நடத்துவது குறித்த சில மாநிலங்களில் கருத்து கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஓரிரு வாரங்களில் ஆலோசனை நடத்திய பிறகு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், முடிவெடுத்த உடனே தேர்தல் குறித்த அறிக்கை விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பீகார் வால்மீகி நகர் மக்கள் மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதும், மத்திய பிரதேசத்தில் 27 பேரவைத் தொகுதிகளில் காலியாக இருப்பதாகவும் தேர்தல் அதிகாரி கூறினர்.

மேலும், காலியாக உள்ள பெரும்பான்மையான வகையில், காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி எம்.எலஏக்கள் பாஜகவில் இணைந்ததனால் காலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர சட்டீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தல ஒரு பேரவை தொகுதியும், ஜார்கண்ட் ,கேரளம், நாகலாந்து, அசாம் ,தமிழகம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இரு பேரவைத் தொகுதிகளும் காலியாக இருப்பதனை கூறியுள்ளார்.

மேலும் ,மணிப்பூரில் 5 பேரவைத் தொகுதிகளும், குஜராத், உத்தரபிரதேசத்தில் தலா 8 பேரவைத் தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் தலைமை அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K