இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்!

0
139
Buses will not run in Tamil Nadu on this day! Released action information!
Buses will not run in Tamil Nadu on this day! Released action information!

இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்!

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்காண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கான  சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராட்டம் நடத்தினர்.

இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல 2019 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மூத்தோர் இளையோர் என்று தனித்தனியாக பிரித்து ஐந்து சதவீதம் வரை சம்பளத்தை  உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து தற்பொழுது மீண்டும் வரும் 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர்.அந்தவகையில்,அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றை நிரப்பக் கோரி பல முறை புகார் அளித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. அது மட்டுமின்றி கூடுதலாக வேலை செய்யும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு நாள் ஊதியமானது முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நடத்துனர் இல்லாமல் இயங்கும் பேருந்து சேவைகளை ரத்து செய்யவும் கேட்டுள்ளனர். அத்தோட 2015 ஆம் ஆண்டு முதல், அகவிலைப்படி உயர்வானது வழங்கப்படவில்லை. இந்தாண்டாவது அகவிலைப்படியை உயர்த்தி தருமாறு கேட்டுள்ளனர். மேலும் தற்பொழுது புதிதாக இயற்றப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையெல்லாம் மையமாக வைத்து டிசம்பர் 13ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து ஊழியர்களும் தர்ணா போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.