ஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!

0
68

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அறை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி கோவில்கள் திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் என்று எல்லாவற்றிற்கும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விடவும் மிகத் தீவிரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே ஒரு இடங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. தொடர் வண்டிகள் மற்றும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதன் காரணமாக, வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் வாடகை ஆட்டோ டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இரவு நேர பேருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் ஒரு திண்டாட்ட சூழ்நிலையை எதிர் கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெகுதூரம் செல்லும் பேருந்துகள் ஆன திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி தென்காசி, போன்ற தென் மாவட்டங்களுக்கு போகும் பேருந்துகள் எல்லாம் மாலை மற்றும் இரவு வேலைகளில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் பேருந்துகளை காலை நேரத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வெளிமாவட்ட மற்றும் தென் மாவட்டங்களுக்கு இரவு 10 மணிக்கும் சென்று வரும் விதத்தில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தொலைதூர பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் போன்றவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இரவு நேர ஊரடங்கு காரணமாக, 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது. விரைவு பேருந்துகளில் முன்னரே முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் மாற்று பயண தேதிக்கு பதில் பேருந்து முன்பதிவு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது போக்குவரத்துத்துறை.