இனி பேருந்தில் சில்மிஷம் செய்தால் அதோகதிதான்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
70

தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட தற்போது வாய்ப்பில்லை என்று தெரியவந்திருக்கிறது.

ஆனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் ஊதிய உயர்வு கோரி சமீபத்தில் போராட்டத்தில் குதித்தார்கள் இந்த நிலையில், போக்குவரத்து துறைக்கு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய சிவசங்கர் அதனை எவ்வாறு கையாள்வார் என்பதை ஒட்டுமொத்த மாநிலமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற திட்டத்தை செயல்படுத்த்தியதன் மூலமாக போக்குவரத்துத்துறை மிகுந்த நலிவுற்ற நிலையில் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வெளியிட்டிருக்கக்கூடிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் பயணிகளின் முகங்களை அறியும் விதத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று பேருந்துகளில் பெண்களின் வசதிக்காக அவசரகால பட்டங்களும் அமைக்கப்படும் சிசிடிவி அவசரகால பட்டன்கள் உள்ளிட்டவை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.